விண்வெளி உடை அணிந்து நூதன போராட்டம்

புதுச்சேரி,  ஜன. 19: புதுவை லாஸ்பேட்டையில்  சமீபத்தில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமானது. கல்வி  நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ள இப்பகுதியில் சாலைகளை உடனடியாக சீரமைக்க  வேண்டுமென இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  வலியுறுத்தி வந்தன. இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதை  கண்டிக்கும் வகையிலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்  விதமாகவும், லாஸ்பேட்டை அசோக் நகரில் இந்த இயக்கங்களின் சார்பில் நேற்று  விண்வெளியில் நடக்கும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க தலைவர்  ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  கிளை தலைவர்கள் நிஷாந்த், சகிம், வாலிபர் சங்க உழவர்கரை நகர தலைவர் சஞ்சய்,  வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலைகளை  சீரமைக்கக்கோரி கோஷமிட்டனர். அப்போது விண்வெளியில் நடப்பதுபோல் 2  சிறுவர்கள் கவச உடையணிந்து சாலையில் நடந்து நூதன போராட்டம் நடத்தினர். இதை  அப்பகுதி மக்கள்  நகைப்புடன் பார்த்துச் சென்றனர்.

Related Stories: