சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டரிடம் மனு

சிவகங்கை, ஜன.14:  சிவகங்கை அருகே அழகுநாச்சிபுரம் கிராமத்தில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது. கலெக்டர் ஜெயகாந்தனிடம், கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மற்றும் கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியதாவது: சிவகங்கை தாலுகா அழகமாநகரி ஊராட்சியில் அழகுநாச்சிபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லை. சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை கடந்த 30ஆண்டுகாலமாக வேலி அமைத்து தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். வருவாய்த்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட அமைச்சர், தமிழக முதல்வர், சட்டப்பேரவை மனுக்கள் குழு, தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு அளித்தோம். நீண்டகாலமாக நடவடிக்கை இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் பாதையை பார்வையிட்டு இடம் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது.

ஆனால் அதன்பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பாதை இல்லாமல் கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. சுடுகாட்டு பாதை, நீர் பிடிப்பு பகுதி, நீர் வரத்து கால்வாய் என சுமார் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜன.26ல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: