ஊராட்சி மன்ற தேர்தல்: மூவரசம்பட்டில் 25 பேர் விருப்ப மனு

ஆலந்தூர்: மூவரசம்பட்டு ஊராட்சி வார்டு  உறுப்பினர்களாக தேர்வு செய்ததற்கான தேர்தல் அடுத்த மாதம் 6ம்தேதி நடக்கிறது. வார்டு உறுப்பினர்களாக போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் நேற்று மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் மூவரசம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்துனரான செம்மஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சவுந்தர்ராஜன் முன்னிலையில் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை வரை 25 பேர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.  நேற்று மாலை வரை ஒருவர்கூட மனுதாக்கல் செய்யவில்லை. மூவரசம்பட்டு ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில். 6-வார்டுகள் பொது வார்டுகளாகவும் 6 பெண்களுக்கான வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மூவரசம்பட்டு ஊராட்சியில் தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.   …

The post ஊராட்சி மன்ற தேர்தல்: மூவரசம்பட்டில் 25 பேர் விருப்ப மனு appeared first on Dinakaran.

Related Stories: