மேலகரம் பள்ளியில் மாறுவேட போட்டி

தென்காசி, ஜன. 13: உலக  இளைஞர் தினத்தையொட்டி மேலகரம் மகரிஷி வித்யா மந்திர் மழலையர் தொடக்கப்பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடந்தது. மேலகரம் எழில்நகரில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் நடந்த இப்போட்டிகளின் துவக்கவிழாவுக்கு பள்ளித் தாளாளர் முத்தையா தலைமை வகித்தார். முதல்வர் ஆரியமாலா வரவேற்றார்.  இதையொட்டி விநாயகர், முருகன், கிருஷ்ணர், ராதை, பாரதியார், ஜவஹர்லால் நேரு, ஜான்சிராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், காந்தியடிகள், விவேகானந்தர், காவலர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியை, அப்துல்கலாம், ராக்கெட் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பலர் பல்வேறு வேடமணிந்து பங்கேற்றனர்.

மேலும் விவசாயி, காய்கறி மற்றும் இயற்கை தானியங்களின் அவசியம், மழை நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், தானத்தில் சிறந்தது ரத்ததானம் வழங்குதல், மரக்கன்றுகள் வளர்ப்பு, செய்திதாள்கள் குறித்து வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போட்டியில் ஜேசிஐ கடையநல்லூர் பெஸ்ட் தலைவர் ராஜகோபால், முன்னாள் மண்டல தலைவர் முகம்மது உவைஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Related Stories: