பாலிடெக்னிக் கல்லூரியில் முதலுதவி பயிற்சி முகாம் நிறைவு

காரைக்கால், ஜன. 13:  காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு 4 நாட்கள் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை காரை மாவட்ட பெற்றோர் சங்கம், அன்னை தெரசா சமூக சேவை அமைப்பு, தனியார் அக்குபஞ்சர் நிறுவனம், காரைக்கால்  தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தின. இதன்  நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சந்தானசாமி தலைமை தாங்கினார். காரை மாவட்ட பெற்றோர் சங்க தலைவரான அன்னை தெரசா சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சோழசிங்கராயர்  முன்னிலை வகித்தார்.  போலீஸ் எஸ்பி வீரவல்லபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முகாமில் அக்குபஞ்சர்  பேராசிரியர்  மோகனராஜன் மாணவர்களுக்கு முதலுதவி, நினைவுத்திறன் மேம்பாடு, தீய பழக்கத்தை  தவிர்ப்பு, மகளிர் பிரச்னைக்கான தீர்வு காணுவது  குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 4 நாட்கள் நடைபெற்ற  முகாமில் 650க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. துறைத்தலைவர்கள் பால்ராஜ்சாமி, ராஜகணபதி, சந்திரசேகரன், ராஜேஸ்வரி, கந்தன், வேலாயுதம், வினோலியா, தரமேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் ஜெயப்பிரகாஷ், விரிவுரையாளர் சுகன்யா, விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: