புதுச்சேரி, ஜன. 13: புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் இந்த ஆண்டுக்கான சமத்துவ பொங்கல் விழா அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் குளத்தின் அருகே நாளை (14ம் தேதி) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அடுப்பு மூட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு விழாவை கொண்டாடுகின்றனர்.