தேனி என்.எஸ்.இன்ஜினியரிங் கல்லூரியில் ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

தேனி, ஜன. 9: தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடந்தது.தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வானமே எல்லை என்ற தலைப்பில் பிளஸ்டூ பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஊக்குவிப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இம்முகாமிற்கு தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி தலைமை வகித்தார். உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திருப்பதி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் தேனி ராகவன், பெரியகுளம் பாலாஜி ஆகியோர் பேசினர்.இதில் தேனி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் இந்திய அரசு நிதி அமைச்சகம், வருவாய்த்துறையின் கூடுதல் ஆணையாளர் நந்தகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்கல்வியில் பாடப்பிரிவினை தேர்வு செய்தல், உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்குரிய தேர்வுகள், பாடப்பிரிவுக்கேற்ற அரசுத் தேர்வினை எழுதும் வழிமுறைகள் மற்றும் தேர்விற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வழிமுறைகள் கிறுத்தும், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலக்குகளை அடையும் முறைக்ள குறித்தும் விளக்கி பேசினார்.இதில் கல்லூரியின் செயலாளர் காசிபிரபு, இணை செயலாளர் ராஜ்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்விநிலையங்களின் நிர்வாகிகள், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories: