ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

ஓசூர், ஜன.8: ஓசூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கியது. ஓசூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. புதுடில்லி தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பசுமை வேலைக்காக திறன் மேம்பாட்டு மையம், ஓசூர் மாநகராட்சியுடன் கோவை நேர்டு தொண்டு நிறுவனம் இணைந்து 5 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியை மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: ஓசூர் மாநகராட்சியை சுத்தமாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்களின் பணி மகத்தானது. அவர்களது பணி மேலும் சிறக்கவும் அவர்களது ஆரோக்கியம் மேம்பாட்டிற்கு என கையுறை முகத்திரை மற்றும் பிரதி பலிப்பு அங்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். 5 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அடுத்த மூன்று மாதங்களில் 470 தற்காலிக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். என்றார்.

பயிற்சியில் குப்பையில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்து மின்சாரம் தயாரித்தல் மற்றும் உரம் தயாரித்தல் சாக்கடைக் கழிவுகளை கையாளும் பொழுது பயன்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு கருவிகள் போன்றவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் துப்புரவு ஆய்வாளர் சுந்தர மூர்த்தி நன்றி கூறினார். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். காரப்பட்டு பஞ்சாயத்து தலைவர் பதவியேற்புஊத்தங்கரை, ஜன.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமாதேவி கோவிந்தன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கையர்கரசி தலைமையில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து 9வது வார்டு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: