திருச்சி, ஜன.8: திருச்சி மண்டல சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவளர்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொருளாதார கடன் வழங்கும் விழா மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம் நேற்று நடைபெற்றது.கடந்த ஆண்டில் விவசாய காசுக்கடனாக 179 பேருக்கு ரூ.1.65 கோடி, விவசாய நகைக்காசுக்கடனாக 156 பேருக்கு ரூ.1.03 கோடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக 13 குழுக்கள் 156 பேருக்கு ரூ.53 லட்சம், மத்திய காலக்கடனாக 17 பேருக்கு ரூ.7.65 லட்சம், சுயஉதவிக்குழுக்களுக்கு கடனாக 108 பேருக்கு ரூ.26 லட்சம் என மொத்தம் ரூ.3.65 கோடி கடன் வழங்கி உள்ளது.இச்சங்கம் 2018-19ம் ஆண்டில் ரூ.18.55 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.விழாவில் திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான தனலட்சுமி, திருச்சி சரக துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், திருவளர்சோலை தொடக்க வேளாண் கடன் சங்க தலைவர் கர்ணன், துணைத்தலைவர் சாமிக்கண்ணு, நிர்வாக இயக்குனர்கள் பானுமதி, தனபால், கவிதா, முத்துசாமி, முத்துக்குமார், செந்தமிழ்செல்வன், சுமதி, விஜயலட்சுமி, செயலாளர் பேபி, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
