திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு `சீல்’

 

திருச்சி, ஜூலை 30: திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்களில் கடைகளில், வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடை உரிமையாளர்கள் கடந்த சில மாதமாக தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.

தொடர்பாக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கடை உரிமையாளர்கள் வாடகை பணத்தை கட்டாத காரணத்தால் நேற்று மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், திருவரங்கம் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வாடையை செலுத்தாத 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின்போது, கோட்டை காவல் நிலைய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

Related Stories: