விருதுநகரில் சாலைப்பணி முடிந்த பின்னர் மேன்ஹோல் சீரமைப்பு பணி நகராட்சியால் நாசமாகும் சாலைகள்

விருதுநகர், ஜன. 8: விருதுநகரில் சாலைப்பணி முடிந்த பின்னர், பாதாளச்ச் சாக்கடைக்கு பள்ளம் தோண்டும் நகராட்சி நடவடிக்கையால், சாலைகள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகரின் நுழைவு பகுதியான மதுரை ரோடு முதல் மாரியம்மன் கோவில் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட பாதளாச்சாக்கடை மேன்ஹோல்கள் சாலை உயர்த்தப்பட்டதால் ஒரு அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. ரோடு போடும் நிறுவனத்தினரும் நகராட்சியிடம் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்களை உயர்த்தி தரும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் மேன்ஹோல்களின் உயரத்தை உயர்த்தும் பணிகளை செய்யவில்லை. இதை தொடர்ந்து பொறுத்து பார்த்த ரோடு போடும் நிறுவனம், கடந்த வாரம் முழுமையாக ரோடு போடும் பணியை முடித்தது. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்த பிறகு நகராட்சி நிர்வாகம் மேன்ஹோல்களின் உயரத்தை உயர்த்துவதற்காக ரோட்டை தோண்டி வருகிறது. இதனால், ரோடுகளுக்கு மேன்ஹோல்களுக்கு வித்தியாசம் ஏற்படும். தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிமான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் மேன்ஹோல்களை சுற்றி ரோடுகள் சேதமடைந்து விடும். 5 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க வேண்டிய ரோடு ஒரு ஆண்டிற்குள் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகைக்கு மாறி விடும் என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Related Stories: