இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் பதவியை பிடிக்க சுயேச்சைகளுக்கு எகிறும் மவுசு

சிவகங்கை, ஜன. 8:  சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவியை பல இடங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் சுயேட்சைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது. ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் உறுப்பினர்கள் வாக்களித்து ஒன்றிய தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.  திருப்புத்தூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 இடங்களில் திமுக கூட்டணி 10, அதிமுக 2, சுயே 1இடங்களை பிடித்துள்ளதால் திமுக தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. கல்லல் ஒன்றியத்தில் 16 இடங்களில் திமுக கூட்டணி 9, அதிமுக 7 இடங்கள் என்பதால் திமுக தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. திருப்புவனம் ஒன்றியத்தில் 17 இடங்களில் திமுக கூட்டணி 10, அதிமுக கூட்டணி 5, அமமுக 1, சுயே 1இடங்களை பிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.

மானாமதுரை ஒன்றியத்தில் 14 இடங்களில் திமுக கூட்டணி 7, அதிமுக 6, அமமுக 1இடம் பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. தேவகோட்டை ஒன்றியத்தில் 14 இடங்களில் அதிமுக கூட்டணி 8, திமுக 5, அமமுக 1 இடங்களை பிடித்துள்ள நிலையில் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 7 இடங்களில் அதிமுக 4, திமுக கூட்டணி 3 இடம் பிடித்துள்ள நிலையில் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. கண்ணங்குடி ஒன்றியத்தில் ஆறு இடங்களில் அமமுக 4, காங்கிரஸ் 2 இடங்களை பிடித்தன. இங்கு அமமுக தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. இளையான்குடி ஒன்றியத்தில் 16 இடங்களில் திமுக 7, அதிமுக 8, சுயே 1இடம், சாக்கோட்டை ஒன்றியத்தில் 11இடங்களில் அதிமுக 5, திமுக கூட்டணி 5, சுயே 1இடம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 10 இடங்களில் அதிமுக கூட்டணி 5, திமுக கூட்டணி 4, சுயே 1இடம், சிவகங்கை ஒன்றியத்தில் 18 இடங்களில்

அதிமுக கூட்டணி 9, திமுக கூட்டணி 7, அமமுக 1, சுயே 1இடம், காளையார்கோவில் ஒன்றியத்தில் 19 இடங்களில் திமுக கூட்டணி 8, அதிமுக கூட்டணி 9, சுயே 2 இடம் பிடித்துள்ளன. இதில் நான்கு ஒன்றியங்களை திமுகவும், இரண்டு ஒன்றியங்களை அதிமுகவும், ஒரு ஒன்றியத்தை அமமுகவும் கைப்பற்றுவது உறுதியான நிலையில் ஐந்து ஒன்றியங்களில் இழுபறி நீடிக்கிறது. இந்த ஐந்து ஒன்றியங்களில் சுயேட்சை மற்றும் அதிருப்தியில் உள்ளவர்களை சரிசெய்யும் வேலைகளில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்களில் 90 சதவீதத்தினர் கட்சியில் சீட் கேட்டு வழங்கப்படாமல் அதிருப்தியில் நின்றவர்கள்தான். அதனால் அவர்களிடம் பேசி வருகிறோம். இழுபறியில் உள்ள ஒன்றியங்களில் இதுவரை முடிவு ஏற்படவில்லை. தேர்தல் அன்றுதான் என்ன நடக்கும் என்பது தெரியும்’ என்றனர்.

Related Stories: