எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் அறிவியல்-தொழில்நுட்ப கண்காட்சி

சேலம், ஜன.8: நாமக்கல் மாவட்டம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்துடன் இணைந்து நடத்தும் அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் விமானவியல் கண்காட்சி-2020  எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நாளை(09.01.20) காலை 9.30 மணியளவில் துவங்குகிறது. துவக்க விழாவிற்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவரும்,  ரோட்டரி மாவட்டம் 2982-ன்   ஆளுநருமான பேராசிரியர் நடேசன் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர் டாக்டர் மதன் கார்த்திக் வரவேற்கிறார். நிர்வாக அறங்காவலர் பார்வதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நாமக்கல் உஷா, ஈரோடு பாலமுரளி மற்றும் சேலம் கணேஷ்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூடுதல் இயக்குனரும், விஞ்ஞானியுமான ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். இக்கண்காட்சி வரும் 11ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

Related Stories: