நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காணாமல் போன கல்பூங்கா

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுக்கு கல்பூங்கா அமைக்கப்பட்டது. அரசு பெருந்திட்ட வளாகத்தில் தேவையில்லாமல் கிடந்த கருங்கற்களை கொண்டு இந்த பூங்கா முழுமையாக வடிவமைக்கப்பட்டது. இப்பூங்காவில் சிறுவர் விளையாட ஊஞ்சல், ராட்டினம், யானை சிலை, முதலை போன்ற உருவம் என அனைத்தும் கற்களால் செதுக்கப்பட்டது. இந்த பூங்கா கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கும் இடமாக மாறியது. சுமார்  அரை ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட கல்பூங்காவில் பராமரிப்பு பணிகள் கடந்த சில ஆண்டாக நடைபெறவில்லை. இங்குள்ள அதிகாரிகள் இதை பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. இதன் காரணமாக கல்பூங்கா பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. பூங்கா முழுவதும் முட்புதர்கள், செடி, கொடிகளாக மாறிவிட்டது. விஷ சந்துகளும் பூங்காவில் அதிகமாக குடியேறிவிட்டது. இதனால், பூங்காவின் அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை காணப்படுகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: