புதுவையில் கடத்தப்பட்ட டுடோரியல் மாணவி மீட்பு

புதுச்சேரி,  ஜன. 8: புதுவை அரியாங்குப்பத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட டுடோரியல் மாணவி  மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் சந்தேகிக்கப்பட்ட  ரவுடியை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது மாணவி  புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு டுடோரியல் சென்டரில் ஸ்போக்கன் இங்கிலீஷ்  படித்து வந்தார். கடந்த 2ம்தேதி அங்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அதில், புதுச்சேரி, பெரியார் நகரில் வசிக்கும் ரிஷி என்ற ரிஷிகுமார் (21)  என்பவர் தனது மகளை கோட்டமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கடத்தி  சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் எஸ்ஐ  ராஜன் தலைமையிலான போலீசார், கடத்தல் பிரிவின்கீழ் ரிஷிகுமார் மீது  வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதனிடையே விழுப்புரத்தில்  உறவினர் வீட்டில் தங்கியிருந்த மாணவி புதுச்சேரி திரும்பிய நிலையில் அவரை  நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் மாணவி அவரது பெற்றோருடன்  அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே மாணவி கடத்தலில் சந்தேகிக்கப்பட்ட  ரவுடி ரிஷியை, தவளக்குப்பத்தில் ஒரு வழிப்பறி வழக்கில் அதிரடியாக கைது செய்த  போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: