பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 24 கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு

சேலம், ஜன.3: சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மல்லூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நடந்தது. காலை 7மணி முதலே வேட்பாளர்களின் முகவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பென்சில், பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கேமரா, தண்ணீர் பாட்டில், குடை, கைப்பை போன்ற பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் பூ மற்றும் எலுமிச்சை பழத்துடன் மையத்திற்கு வந்தனர். அதனை சோதனை செய்த போலீசார், எலுமிச்சை பழங்களை பறிமுதல் செய்து உள்ளே அனுப்பி வைத்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ராஜா, கர்ணன், உதவி தேர்தல் அதிகாரி கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலையில் அறை கதவு திறக்கப்பட்டது. அங்கிருந்த வாக்கு பெட்டிகளை ஒவ்வொரு அறைக்காக எடுத்துச்சென்று அதை தனித்தனியாக பிரிக்கும் பணி நடந்தது. வாக்கு எண்ணிக்கையையொட்டி பள்ளி முழுவதும் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கீழ் தளத்தில் உள்ள மானிட்டரில் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.

Related Stories: