புத்தாண்டு கொண்டாட்டம் மேற்கு மண்டலத்தில் விபத்துகள் 78% குறைவு

கோவை, ஜன.3:மேற்கு மண்டலத்தில் புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துக்கள் இந்த ஆண்டு 78% குறைந்துள்ளதாக ஐஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-மேற்கு மண்டலமான 8 மாவட்டங்களில் கோவை-10, ஈரோடு-8, திருப்பூர்-10, நீலகிரி-6, சேலம்-12, நாமக்கல்-10, தருமபுரி-23,  கிருஷ்ணகிரி-10 என மொத்தம் 89 இடங்களில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியவர்கள், வாகன விதிமீறலை மீறியவர்கள் மற்றும் அதிவேகமாக ஓட்டியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2019ம் ஆண்டு புத்தாண்டன்று 33 ஆக இருந்த மொத்த வாகன விபத்துக்கள் 2020ம் ஆண்டு 7 ஆக குறைந்துள்ளது. இது  கடந்த ஆண்டை காட்டிலும் 78.79% குறைவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: