விருதுநகர், டிச.31: விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 6 ஒன்றியங்களில் என இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தல் டிச.27ல் நடைபெற்ற ராஜபாளையம் ஒன்றிய வாக்குபெட்டிகள் ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் திருவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு ஒன்றிய வாக்குப்பெட்டிகள் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியிலும், சிவகாசி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றிய வாக்குப்பெட்டிகள் ஆலங்குளம் ஈ.ஆர்.ஆர்.ராமசுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.