தேவாரம் பகுதிக்கு வெளியூர் வாக்காளர்களை அழைத்து வர வாகனங்கள் தடுப்பார்களா தேர்தல் அதிகாரிகள்?

தேவாரம், டிச.30: இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் வெளியூர்களில் உள்ள வாக்காளர்களை அழைத்துவர வாகனங்கள் அதிகளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவாரம் பகுதிகளில் லட்சுமிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், மேலசிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் நடக்கும் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடக்கூடியபவர்கள் இன்று (டிச.30) நடக்கும் வாக்குப்பதிவில் தங்களது ஆதரவாளர்களாக உள்ளவர்களுக்கு ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அமர்த்தி காலையில் இருந்தே ஓட்டுப்போட வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைய விதிகளின் படி எந்த வாகனங்களையும் அமர்த்தி அழைத்துவரக்கூடாது என்பது விதியாக உள்ளது.

Related Stories: