பட்டிவீரன்பட்டி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பில் நெகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி, டிச. 29: பட்டிவீரன்பட்டியில் என்எஸ்விவி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2003ம் ஆண்டு 12ம் வகுப்பில் 52 மாணவிகள் படித்தனர். இதில் 33 மாணவிகள் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பில் தாம் பள்ளியில்  அமர்ந்து படித்த வகுப்பறை, பேசி மகிழ்ந்த இடங்கள், தங்களுக்குள் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து ஆடல், பாடல், விளையாட்டு என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முன்னாள் மாணவிகள் செல்வரேகா, மணிமாலா, ஈஸ்வரி, பிரசன்னலட்சுமி ஆகியோர் கூறியதாவது, ‘இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளம் தான். இதன்மூலம் செல் நம்பரை வாங்கி சேகரித்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த சந்திப்பு நிகழ்ச்சியினை நடத்தியுள்ளோம். இதில் பலர் மருத்துவம், வங்கி, அரசுத்துறை, காவல்துறை என பல்வேறு துறைகளில் உள்ளனர். மேலும் தங்களால் நாம் படித்த பள்ளிக்கும் ஊருக்கும் உதவி செய்ய உள்ளதாக தெரிவித்தனர்’ என்றனர். முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பால்ராஜ் முன்னாள் மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

Related Stories: