கட்டிகானப்பள்ளியில் திமுக வேட்பாளர் ரிஹானா தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கட்டிகானப்பள்ளி முன்னாள் தலைவர் சையத் ஏஜாஸ்அகமது மனைவி ரிஹானா அகமது வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்றுதனது சின்னமான மூக்குகண்ணாடிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் பெற்றுத்தரப்படும். அனைத்து பகுதிகளிலும் தார்சாலை அமைத்து தரப்படும். மாணவ, மாணவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டி தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைத்து பயன்பெறும் செயல்படுத்தப்படும். பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

விளையாட்டு மைதானம், உதவி தொகை பெற்று தரப்படும். பகுதிநேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் நகர செயலாளர் நவாப், முன்னாள் நகர்மன்ற தலைவி பரிதாநவாப், முன்னாள், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அமீன், சையத்ஏஜாஸ் அகமது, ஜாவித், இர்பான், ருக்கு, குப்பன், சரவணன், ரிஷ்வான், குத்புதின் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Related Stories: