குளித்தலை பஸ் நிலையத்தில் பரபரப்பு தாந்தோணிமலை பெருமாள் கோயில் எதிரே செயல்பாடற்ற குடிநீர் தொட்டி

கரூர், டிச. 25: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் எதிரே பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தென்புற நுழைவு வாயில் எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பகுதியை சுற்றிலும் குடியிருக்கும் பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் இதனை பயன்படுத்தி வந்தனர். மோட்டார் பழுது போன்ற சில காரணங்களால் சில ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி செயல்படாமல் உள்ளது.

பிரதான சாலையோரத்தில் இந்த தொட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் எந்தவித பயன்பாடும் இன்றி உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கோயில் அருகே உள்ள இந்த குடிநீர் தொட்டியை பக்தர்கள் முதல் அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் வகையில் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: