உஞ்சினி - வாரியங்காவல் சாலையில் மரக்கன்றுகள் நடவு பணி

அரியலூர்,டிச.24: அரியலூர் மாவட்டம் செந்துறை நெடுஞ்சாலைதுறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி உஞ்சினி - வாரியங்காவல் சாலையில் நடந்தது. நெடுஞ்சாலைத்துறையின் தமிழக தலைமை பொறியாளர் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, ஆந்திராவிலிருந்து சுமார் பத்தடி உயரமுள்ள ஆலங்கன்று, அரசங்கன்று, மகிழம் மற்றும் வேம்பு ஆகியவை வரவழைக்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவு செய்து வருகின்றனர்.செந்துறை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பணியாளர்கள் செந்துறை அருகே உள்ள உஞ்சினி முதல் வாரியங்காவல் வரையுள்ள 12 கிலோமீட்டர் சாலையின் இரு புறமும் இடைவெளி உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

Related Stories: