ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு 7 லட்சத்தில் பித்தளை கவசம் அமைக்கும் பணி

ஓசூர், டிச.19: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தூண்களுக்கு 7 லட்சம் மதிப்பில் பித்தளை கவசம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. ஓசூர் நகரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயில் மலை மீது உள்ளது. இங்கு மார்ச் மாதத்தில் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், கோயிலின் கருவறை முகப்பு பகுதி மற்றும் 4 தூண்களுக்கு ₹7 லட்சம் மதிப்பில் பித்தளைக்கவசம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதுகுறித்து சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்கமிட்டி தலைவர் டாக்டர் மனோகரன் கூறுகையில், ‘சந்திரசூடேஸ்வரர் கோயில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை செப்பனிடும் பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ₹7 லட்சம் மதிப்பில் கருவறை முகப்பு மற்றும் கருவறையில் உள்ள 4 தூண்களுக்கு 150 கிலோ எடையில் பித்தளை தகடுகள் பொருத்தும் பணிகளை எனது சொந்த செலவில் தொடங்கி உள்ளேன். கோயில் கல் தூண்களில் உள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சிதையாமல் இருக்க சிற்பங்களை தகட்டில் செய்து பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் 45 நாட்களில் நிறைவு பெறும்,’ என்றார்.

Related Stories: