வனசரக அலுவலருக்கு பிரிவு உபசார விழா

தேன்கனிக்கோட்டை, ஜூன் 2: அஞ்செட்டி வனசரக அலுவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் மற்றும் வனகாவலர் முனிகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பிரிவு உபசார விழா நேற்று அஞ்செட்டி வனத்துறை ஓய்வு விடுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ஓசூர் வனகோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமை தாங்கி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் வனத்துறை அலுவலர்கள், ஓய்வு பெற்றவர்களை வாழ்த்தி பேசினர். தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, உரிகம், ஜவளகிரி வனசகர அலுவலர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள், வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஓய்வுபெற்ற வனத்துறையினர், மழைவாழ் மக்கள் சங்க தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

The post வனசரக அலுவலருக்கு பிரிவு உபசார விழா appeared first on Dinakaran.

Related Stories: