புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்து துறையின் PY-02 U (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்ஸி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல் ஜனவரி 8ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. எனவே, இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவுச் சொல்லை //parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் `New Public User’ மூலமாக வரும் 18ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே ஜனவரி 2ம் தேதி காலை 11 மணி முதல் ஜனவரி 8ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.