பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

சென்னை : பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம்.பெண் குழந்தைகள் பயன்பெறச் ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம் . திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையைத் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: