கெங்கவல்லி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

கெங்கவல்லி, டிச.13: வீரகனூர் அருகே சுவேத நதியில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார், மணலுடன் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். கெங்கவல்லி சுவேத நதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக சேலம் எஸ்பி தீபாகனிக்கருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று இரவு வீரகனூர் எஸ்ஐ பெளத்திர வெங்கடேஷ் தலைமையில் போலீசார் கவர்பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சுவேத நதியில் இருந்து 3 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், மணல் கடத்தி வந்தவர்கள் கவர்பண்ணை பகுதியை சேர்ந்த தனபால்(32), விக்னேஸ்வரன்(26), பாண்டித்துரை(24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: