குமாரபாளையம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம்,டிச.13: குமாரபாளையம்  அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படையினர் பிளாஸ்டிக் ஒழிப்பு   விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு,  மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். பள்ளியில்  இருந்து புறப்பட்ட மாணவர்படை பேரணி, நகரின் முக்கிய தெருக்கள் வழியாக  சென்றது. வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு  பிரசுரங்களை வழங்கினர்.

மேலும், சந்தையில் காய்கறி மற்றம் பொருட்களை  வாங்கி பொதுமக்களுக்கு துணி பைகளை பயன்படுத்தும்படி வழங்கி, விழிப்புணர்வை  ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் விடியல் அமைப்பின் தலைவர் பிரகாஷ், உதவி  தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், ரவி, தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி,  சாரணர் இயக்க அலுவலர் சரவணன், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா,  பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில்  பங்கேற்றனர்.

Related Stories: