சூளகிரி அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குட்டைகள் அழிப்பு

சூளகிரி, டிச.13: சூளகிரி அருகே கொத்தகிரியில் 15 ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குட்டைகள் அழிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில், நேற்று சூளகிரி தாசில்தார் ரெஜினா, மீன்வளத் துறை ராமன், சூளகிரி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உமாசங்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் இணைந்து சூளகிரி அருகே கொத்தகிரி மற்றும் சமணப்பள்ளி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் உத்தனபள்ளி ஆகிய பகுதியில் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் 15 கெளுத்தி  மீன் குட்டைகள் அதிகாரிகள் பொக்லைன் மூலம் அழித்தனர்.  மேலும் அங்குள்ள பண்ணை குட்டைகளில் உள்ள நீரை வெளியேற்றி மண் கொண்டு மூட நடவடிக்ைக எடுக்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: