ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா

தஞ்சை, டிச. 13: தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பாம்பே ஸ்வீட்ஸ் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா நடந்தது. தஞ்சை பாம்பே ஸ்வீட்ஸ் சார்பில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தொடர்ந்து ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் மணிக்கு 1,000 லிட்டர் விநியோகிக்கும் வகையில் வெந்நீர், குளிர்ந்த நீர், சாதாரண நீர் ஆகியவை தனித்தனியே வெளிவரும் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமை வகித்து திறந்து வைத்தார். பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்பிரமணிய சர்மா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாரதி, நிலைய மருத்துவ அலுவலர்கள் செல்வம், உஷாதேவி முன்னிலை வகித்தனர். பாம்பே ஸ்வீட்ஸ் உஷா சர்மா, ஜெயலெட்சுமி, ஷிவானி சர்மா மற்றும் டாக்டர்கள் ஞானசெல்வம், ராஜராஜேஸ்வரி, ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: