மாணவர்களுக்கு நினைவுத்திறன் முதலுதவி பயிற்சி முகாம்

காரைக்கால், டிச. 13:  காரைக்கால் ஊழியபத்து அரசு  உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான நினைவுத்திறன் மற்றும் முதலுதவி  முகாம் நடந்தது. காரை மாவட்ட பெற்றோர்  சங்கம், தனியார் அக்குபஞ்சர் நிறுவனம், அன்னை தெரசா சமூக சேவை அமைப்பும் இணைந்து நடத்திய இம்முகாமிற்கு காரை மாவட்ட பெற்றோர்  சங்க தலைவர் சோழசிங்கராயர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷீலா ஜெயக்குமாரி வரவேற்றார்.

Advertising
Advertising

பேராசிரியர் மோகன ராஜன் மாணவ, மாணவிகளுக்கு நினைவுத்திறன் மற்றும் முதலுதவி பயிற்சி வழங்கினார். எஸ்எஸ்எல்சி தேர்வில் 2 முறை தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற இப்பள்ளி 3வது முறையாக சாதனை புரிய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விரும்பத்தகுந்தவர்களாக  இருப்போம் எனவும், சிறந்த குடிமகனாக இருப்போம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெகஜீவன், ஸ்டெல்லா, காயத்ரி, ஜான்சன், மகாலட்சுமி, ஆகியோர்  செய்திருந்தனர். ஜாஸ்மின், சுமதி, தமிழரசி,  சோமு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: