மைதிலி சரண் குப்த் நினைவு தினம் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மழையால் நிரம்பிய கோயில் குளங்கள்

திருவில்லிபுத்தூர், டிச. 12: திருவில்லிபுத்தூரில் மழையால் கோயில் குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் உயர்ந்தால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள முக்கிய குளங்கள், கண்மாயில் நீர் நிரம்பின. திருவில்லிபுத்தூரில் உள்ள மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான பழைய, புதிய குளங்களில் நீர் நிரம்பியுள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த 2 குளங்களும் நிரம்பியதால், மடவார்வளாகம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளங்கள் வறண்ட காலங்களில் நிலத்தடி நீர் குறைந்து வீடுகளில் போர்வெல்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்தது. இந்நிலையில், மழையால் வைத்யநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான குளங்கள் நிரம்பியதால், வீடுகளில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: