மிதமான மழைக்கு வாய்ப்பு. காய்ந்து வரும் வெங்காயம் கூடுதல் வன ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா? 20 கிராமமக்கள் பரிதவிப்பு 31 பேர் வேட்புமனு தாக்கல் நெல் வயல்களில் எலிகளை அழிக்க ‘புரோமோடையலான் கேக்’

தேனி, டிச.11: நெல்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை அளித்துள்ளார்.பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன் கூறியதாவது: பெரியகுளம் வட்டாரத்தில் சம்பா நெல் அதிகஅளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. நெல் பயிரை எலிகள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எலிகளை கட்டுப்படுத்துவதற்கு எலிக்கிட்டிகளை வைத்து பிடித்து அழிக்க வேண்டும். எலிகளை ரசாயன மருந்து வைத்தும் கட்டுப்படுத்தலாம். ஜிங்க் பாஸ்பைடு 5 கிராம், உணவு எண்ணை 15 கிராம், பொடி செய்த தானியம் 4 கிராம், மாவுப்பொருள் 40 கிராம் ஆகியவற்றை கலந்து எலிநடமாடும் இடங்களில் வைத்து கட்டுப்படுத்த வேண்டும். மருந்து கலந்த உணவை வைக்கும் முன் இரண்டு நாட்களுக்கு மருந்து கலக்காத உணவை வைத்து எலிகளுக்கு நச்சு கூச்சத்தை போக்க வேண்டும். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஜிங்க் பாஸ்பைடு கலந்த உணவை வைத்து எலிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

புரோமோடையலான் கேக்குகளை வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம். வார்பரின் மருந்தை வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த கட்டுப்பாடு முறைகளை கிராமத்தில் அனைவரும் இணைந்து கடைபிடித்து எலிகளை கட்டுப்படுத்தலாம். வயல்பரப்புகளை செதுக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பயிர் இல்லாத சமயங்களில் வயல்வரப்புகளை வெட்டி எலிகள், குட்டி எலிகளை அழிக்க வேண்டும். வயலில் களைகளை நீக்கி மாற்று உணவு, இடம் கிடைக்காதவாறு செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் நடவு செய்ய வேண்டும். உயரமான டி வடிவ குச்சிகளை நட்டு ஆந்தை, கோட்டான்கள் ஆகியவற்றை அமரச்செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம். பெரியகுளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்கண்ட ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்து எலிகளை கட்டுப்படுத்தலாம் என பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன் தெரிவித்தார்.

Related Stories: