சின்னாளபட்டியில் தென்னிந்திய ரோல்பால் சாம்பியன்ஷிப் தமிழக மாணவிகள் அணி முதலிடம்

திண்டுக்கல், டிச. 11: சின்னாளபட்டியில் நடந்த சப் ஜூனியர் ரோல்பால் போட்டியில் தமிழக மாணவிகள் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

திண்டுக்கல் சின்னாளபட்டி பிரிவில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சப் ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 6 அணியும், மாணவிகள் பிரிவில் 6 அணியும் விளையாடினர். இதில் மாணவர்கள் பிரிவில் கேரளா அணி முதலிடமும், தமிழ்நாடு அணி இரண்டாமிடம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகா அணி மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதுபோல மாணவிகளுக்கான பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடமும், கேரள அணி இரண்டாமிடமும், கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி அணி மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் செயலாளர் சுப்ரமணியன் கோப்பை மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் இந்திய அணியின் பயிற்சியாளர் பிரேம்நாத், தமிழ்நாடு ரோல்பால் சங்க பொருளாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: