காரமடை அருகே மாதேஸ்வரன் மலை கோயிலில் கார்த்திகை மகா தீபம்

மேட்டுப்பாளையம்,டிச.11:  மேட்டுப்பாளையம் அருகே குட்டையூரில் உள்ள மாதேஸ்வரர் மலை உச்சியில்  மாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 9ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நேற்று நடைபெற்றது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க மலை உச்சியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் நெய் ஊற்றப்பட்ட காடா துணி கொண்ட திரியால் மகா தீபத்தை முன்னாள் போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளிங்கிரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி, எஸ்.எம். டி.குரூப் நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், ஆகியோர் தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தனர்.

விழாவில் காரமடை, ஆசிரியர் காலனி, காந்தி நகர், குட்டையூர், சேரன் நகர் மற்றும் மேட்டுப்பாளைய சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாதேஸ்வரன் கோயில் ஓம் நமச்சிவாய அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: