சுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்த வேண்டும்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறைத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறையானது, பேரிடரால் ஏற்படும் எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தயார்படுத்தி உள்ளது. பேரிடர் காலங்களில் அவசரகால வேலைகளை விரைந்து செயல்படுத்தும் பொருட்டு, தொழில்நுட்ப பணியாளர்களை சேதமுறக்கூடிய இடங்களில் பணியில் முழு நேரமும் அமர்த்தப்படுவார்கள். மேலும், தற்போது மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடையை உடனுக்குடன் அறியும் பொருட்டு ஒரு அவசரகால கட்டுப்பாட்டு அறை மின்துறை தலைமை அலுவலகத்தில் முழு நேரமும் இயங்கி வருகிறது.

Advertising
Advertising

இதனை பொதுமக்கள் 2339532 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-1912 அல்லது 1912 என்ற எண்களின் மூலமாகவோ மின்துறைக்கு தெரியப்படுத்தலாம். பொதுமக்கள் அறுந்து விழுந்த அல்லது சேதமான மின் கம்பிகளையோ அல்லது மின் உபகரணங்களையோ, சாய்ந்த மின் கம்பங்களையோ பார்த்தால், அவற்றை தொட வேண்டாமென்றும், உடனே மேற்கண்ட தொலைபேசி எண்களின் மூலமாக மின்துறைக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும்,  மழைக்காலங்களில் மின் கசிவால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, ஈஎல்சிபி எனப்படும் மின் கசிவு தடுப்பான்களை, வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்த வேண்டி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: