வேளாங்கண்ணி நகர் பகுதியில் மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

குன்னூர், டிச.9: வேளாங்கண்ணி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும்  வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.குன்னூர்  நகராட்சி க்குட்பட்ட வேளாங்கண்ணி நகர் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி பெய்த கன மழையால் இந்த பகுதியில் மண் சரிவு  ஏற்பட்டு 40 அடி உயரத்தில் இருந்து வீடுகளின் முன்புறம் முழுமையாக சரிந்து  கீழே விழுந்தது.

இதன் பேரில், நகராட்சி அதிகாரிகள் போர் கால  அடிப்படையில் சீரமைப்பதாக கூறி 500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு  அடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வசித்து வந்த மக்களை பாதுகாப்பு கருதி  அருகில் உள்ள சமுதாய கூடத்தில் 5 குடும்பத்தினரை தங்க வைத்துள்ளனர்.  மீண்டும் தற்போது பெய்த கன மழையில் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டு  அந்தரத்தில் பல வீடுகள் தொங்கியபடி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் காலம்  தாழ்த்தாமல் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: