பேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்

புதுச்சேரி, டிச. 5: புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி போக்குவரத்துதுறையின் PY-05 VA (திருபுவனை) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 9ம் தேதி காலை 11 மணி முதல் வரும் 31ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விட இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்குபெறுவதற்கு தேவையான பெயர் (User Name) மற்றும் கடவு சொல்லை (பாஸ்வேர்டு) மேற்கண்ட இணையதளத்தில் New Public User மூலமாக வரும் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே வரும் 31ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.

Advertising
Advertising

இந்த மின்ஏல முறையில் பங்குபெற விரும்பும் பொதுமக்கள், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை வரும் 9ம் தேதி முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்ப தொகையின் விவரம், இஎம்டி-யின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் பேமென்ட் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: