கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு

திண்டுக்கல், டிச. 5: திண்டுக்கல்லில் நடக்கவிருந்த மின்வாரிய கேங் மேன் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பக்தவத்சலம் அளித்த செய்தி அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு 4.12.2019 மற்றும் 7.12.2019ம் தேதி வரை 110/22 கே.வி.ஏ அங்குநகர் துணை மின்நிலைய வளாகம், மீனாட்சி நாயக்கம்பட்டி, திண்டுக்கல்லில் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு கடும் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு வருகின்ற டிச. 9ம் தேதிக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு tangedco.gov.in பார்க்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>