திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி

கோவை, டிச.5: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு லோகாமன்யா  வீதியில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் சார்பில்  சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில்  தீபாவளி சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதைப்பார்த்து திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி ரோட்டில் உள்ள டி.வி.கே. நகரை சேர்ந்த பனியன் கம்பெனி அதிபரான அந்தோணி  ஆரோக்கியசாமி (47) என்பவர் பணம் செலுத்தியிருந்தார். இவரைப்போல திருப்பூரை சேர்ந்த மேலும் 9 பேர் ரூ.6 லட்சத்து 92 ஆயிரம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில், அந்நிறுவனம் 9 பேரின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. இதனை நம்பி 9 பேரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வந்தனர். அப்போது டிராவலஸ் நிறுவனம் பூட்டி கிடந்தது. இந்த டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நவீன் அமலநாதன் தலைமறைவாகி விட்டார். அப்போதுதான் திருப்பூரை சேர்ந்த 9 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு போலீசில் அந்தோணி ஆரோக்கியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நவீன் அமலநாதனை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: