அன்னூர் அருகே விவசாய நிலங்களில் ரசாயனம் கொட்ட வந்த கழிவுநீர் லாரி சிறைபிடிப்பு

அன்னூர். டிச.4:  அன்னூர் அருகே குப்பனூர் அடுத்த ஒட்டக மண்டலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று அதிகாலை ஒரு டேங்கர் லாரியில் இருந்து கழிவு நீர் கொட்டுவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பின் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். பின் லாரியை சோதித்து பார்த்தபோது அது தனியார் மில்லில் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள் கலந்த கழிவு நீர் என தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கழிவுநீர் கொட்ட வந்த டேங்கர் லாரி திரும்பி சென்றது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலருக்கு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த கழிவுநீர் பல மாதங்களாக இங்கு இரவு நேரத்தில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் மாசடைந்து அந்த நீரை அருந்திய மாடு ஒன்று இறந்துவிட்டது. மேலும், சில கிணறுகளில் உள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதுபோன்று ரசாயனம் கலந்த நீரை கொட்டும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: