சோழவந்தான் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சோழவந்தான், டிச. 3: சோழவந்தான் அருகே வைகையாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் ஆராட்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. பின்னர் 9 மணிக்கு கோயிலில் இருந்து செண்டை மேளத்துடன் சுவாமி யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து வைகையாற்றில் எழுந்தருளினார். அங்கு பால், நெய், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்ற பின், பக்தர்களின் சரண கோஷத்துடன் ஐயப்ப சுவாமிக்கு வைகையாற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது.பின்னர் சிறப்பு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி, மீண்டும் ஊர்வலமாக சென்றபோது வழி நெடுகிலும் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: