மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் கூடலூர் பிரதிக்ஷாவுக்கு ‘மிஸ் சைனிங் ஸ்டார்’ பட்டம்

கூடலூர் டிச.1:  இந்தோனேசியாவில் நடந்த மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் கூடலூர் பிரதிக்ஷா ‘மிஸ் சைனிங் ஸ்டார்’ பட்டம் வென்றுள்ளார்.இந்தியன் பேஷன் பீஸ்டா அமைப்பு சார்பில்,  இந்தியாவில் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ என்ற போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியாவை தாயகமாக கொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இதில்  பங்கேற்றனர்.  அழகு மட்டுமல்லாமல் தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு திறமைகளின் அடிப்படையில் பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று இறுதி போட்டிக்கு 30 பேர் தேர்வாகினர். அதில் நீலகிரி மாவட்டம்  கூடலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரதிக்ஷா(25)வும் ஒருவராக தேர்வானார்.

இறுதி போட்டி கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் நடந்தது.   அதில் அனைத்து சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட கூடலூரை சேர்ந்த பிரதிக்ஷா ‘மிஸ் சைனிங் ஸ்டார்’ பட்டத்தை வென்றுள்ளார். இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று வெற்றிபெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதிக்ஷா கூறினார்.   அழகை மட்டும் அடிப்படையாக கொண்டு கொண்டு இந்த விருதை வழங்காமல், சாதிக்க துடிக்கும் பெண்களை கண்டறியும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாகவும், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்தடுத்து வரும் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும்  பிரதிக்ஷா தெரிவித்துள்ளார். இவரது தந்தை பிரபாகரன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியும் தாயார் ராதாமணி கூடலூர்  மதுரை  அரசுப்பள்ளி ஆசிரியையும் ஆவர்.

Related Stories: