ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி ஆண்டு விழா

ஊட்டி, டிச. 1: ஊட்டியில் உள்ள பழங்குடியினர் கலாசார மையத்தில் நடந்த இவ்விழாவினை ஊட்டி ஆர்டிஓ., சுரேஷ் துவக்கி வைத்தார். விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் சுந்தரம்பாள் பேசுகையில், ‘‘பெற்றோர்களின் கனவுகளை குழந்தைகள் தான் நனவாக்க வேண்டும். குழந்தைகள் பெரிய பதவிகளை வகிக்க வேண்டும் என்பது கனவு. அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் நாம் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும். படிப்பு மட்டுமின்றி, அனைத்துத்துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும். படிப்பு ஒன்றை மட்டுமே கற்றுக் கொண்டால் போதுமானது இல்லை. விளையாட்டு மற்றும் பிற துறைகளிலும் மாணவர்கள் சாதிக்க வேண்டும். தற்போதே ஒரு குறிக்கோளுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அந்த இடத்தை நீங்கள் அடைய முடியும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: