குமரப்பா பள்ளி மாணவிகள் குழு நடனத்தில் சாதனை

வத்தலக்குண்டு, நவ. 27: திண்டுக்கல் மாவட்ட அளவில் நடந்த குழு நடன போட்டியில் 25 பள்ளிகள் பங்கேற்றன. இதில் நிலக்கோட்டை குமரப்ப பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றனர். சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிர்வாக இயக்குனர் அண்ணாமலை தலைமை வகித்தார். முதல்வர் ஜெய்சங்கர் மாணவிகளுக்கு மெடல் அணிவித்து பாராட்டினார். அதேபோல் பயிற்சியளித்த ஆசிரியர்கள் நதியா, மாலதி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: