நத்தத்தில் வெளிநாடு தொழிலாளர் பயண விழிப்புணர்வு

நத்தம், நவ. 27: நத்தத்தில் யூனியன் அலுவலகம் அருகிலுள்ள சமுதாய கூட வளாகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் போன்றோருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வருவாய்த்துறையும் இணைந்து விழிப்புணர்வு முகாமை நடத்தியது. மண்டல துணை வட்டாட்சியர் மேனகா தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் பார்த்திபன், வளர்மதி, முருகேசன் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கருப்பணன் வரவேற்றார்.

முகாமில் வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்லும் தொழிலாளர்கள், வீட்டுப்பணிக்கு செல்லும் பெண்கள, படிப்பதற்கு செல்லும் மாணவர்கள், அரபு நாட்டுக்கு செல்பவர்களுக்கான அங்குள்ள சட்ட திட்டங்கள், பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் இடையூறுகள் சம்மந்தமாக அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஸ்குமார், முருகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: