வாலிபரை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

பாடாலூர், நவ 27: பாடாலூரில் வாலிபரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கலியபெருமாள் (23). இவர் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன், மாரிமுத்து மகன் கிருபானந்தன், மணிகண்டன் ஆகியோர் மற்றொரு பைக்கில் வந்து கலியபெருமாள் ஓட்டி சென்ற பைக் மீது மோதுவது போல் சென்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்முருகன், கிருபானந்தன், மணிகண்டன், அவர்களது நண்பர்கள் முத்துக்குமார், பிரசாந்த் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து கலியபெருமாளை தாக்கினர்.

இதில் காயமடைந்த கலியபெருமாள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து 8 பேர் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம், கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து 5 மணி நேரம் கடின முயற்சி செய்து இந்த வரைபடத்தை வரைந்தனர்.

Related Stories: