டாக்டர்கள் அறிவுரை கீழக்கொளத்தூரில் வேளாண் துறை சார்பில் கிராமிய கலைநிகழ்ச்சி

அரியலூர், நவ.22: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகிலுள்ள கீழகொளத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கும் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில அரசின் முன்னோடி திட்டங்களான விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரியின் பயர்க் காப்பீடு மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்து கலை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஓசை தொண்டு நிறுவன கலைக்குழுவினர் விளக்கினர். கீழகொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அரியலூர் கலெக்டர் ரத்னா, அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா, திருமானூர் வட்டார வேளாண்மை அலுவலர் சாந்தி, அரியலூர் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) சுப்பரமணியன், அரியலூர் வேளாண்மை அலுவலர் (கலெக்டரின் நேர்முக உதவியாளர்) ரமேஷ் , மற்றும் திருமானூர் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் திருமானூர் மற்றும் கீழகொளத்தூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மைத்துறைச் சார்ந்த திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அட்மா திட்ட பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: