தேசிய நூலக வார விழாவையொட்டி இளம் படைப்பாளர் விருதுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்

கிருஷ்ணகிரி, நவ.22:  52வது தேசிய நூலக வார விழாவினையொட்டி இளம் படைப்பாளர் விருதுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் 52வது தேசிய நூலக வார விழாவினையொட்டி இளம் படைப்பாளர் விருதுக்காக, மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் முதல் பிரிவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும், இரண்டாவது பிரிவில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையும், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் கடந்த 18ம் தேதி நடந்தது. இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 82 மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது.

இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேரலாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், நூலகர்கள் நஸ்ரின்பேகம், ரேணுகா, சக்திவேல், சீனிவாசன், மாதேஸ்வரி, புவனேஸ்வரி, லதா, மணமல்லி, அஸ்கர் சுல்தானா, அர்ஷ்பாபு, சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நூலகர் கோபால்சாமி செய்திருந்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

ஊருக்குள் புகுந்து 30 யானைகள் அட்டகாசம்தேன்கனிக்கோட்டை, நவ.22:  தேன்கனிக்கோட்டை பகுதியில் 30 யானைகள் ஊருக்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. அதில், 30யானைகள் கடந்த சில நாட்களாக தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர், தாவரகரை, மரகட்டா, பேவநத்தம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், கலகோபசந்திரம், பச்சபனட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக அறுவடைக்கு தயாராக உள்ள ராகியை குறி வைத்து யானைகள் விளை நிலங்களுக்குள் படையெடுத்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகிள்ளனர்.

இதையடுத்து, யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். பருவம் தவறி மழை பெய்தாலும் தற்போது ராகி விளைச்சல் நன்றாக உள்ளது. ராகி கதிர்கள் பால் பிடித்தும், இல இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளன. இந்நிலையில், வயல்களுக்குள் யானை கூட்டம் புகுந்து ராகி பயிர்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: